சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்

on Monday, March 16, 2009

தேடி சொறுதினம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பமிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடிகிழ பருவம் எய்தி - கொடும்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

நின்னை சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்கு தருவாய் - என்றேன்
முன்னை தீயவினை பயன்கள் - இன்னும்
மூலதழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னை புதிய உயிர் ஆக்கி - எனக்கு
ஏதும் கவலையரசெய்து - மதி
தன்னை மிக தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!

-பாரதியார்


0 comments:

Post a Comment