ஓட்டு போடாமல் தப்பிக்கணுமா ........ இருக்கவே இருக்கு 49O

on Sunday, March 29, 2009

ஓட்டு போடாமல் தப்பிக்கணுமா ........ இருக்கவே இருக்கு 49O


தேர்தல் வந்துவிட்டது , இனி நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்கும் உரிமையை விட்டுகொடுக்காமல் நமக்கான வாக்கை சரியாய் பதிவு செய்ய கடமை பட்டுள்ளோம் .எனக்கு எந்த கட்சியும் பிடிக்கல,வேட்பாளரையும் பிடிக்கல அப்பிடின்னு பொலம்புறது கேட்குதுங்க ... அதுக்குதான் நம்ம சட்டத்துல இருக்கு அற்புதமான வழி அதுதான் 49 ஓ . அட என்னப்பா அது ?? சொல்லறேன் கேட்டுகோங்க ....

49 ஓ பதிவு செய்யும் முறை :

வாக்குச்சாவடிக்கு சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டு, வாக்குச்சாவடி அதிகாரி நம்மிடம் ஒரு நோட்டில் கைஎழுத்து வாங்குவார்.பிறகு அடுத்த அதிகாரி நமது விரலில் மை வைப்பார்.மை வைத்தவுடன் , நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை ,49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வேண்டும். உடனே நாம் கைஎழுத்து இட்ட அதே நோட்டில் அந்த கைஎழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கைஎழுத்து இட வேண்டும் இது தான் 49 ஓ வை பதிவு செய்யும் முறை. இதன் மூலம் நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் நிரகாரித்த தாக தேர்தல் ஆணையம் நம் வாக்கை பதிவு செய்து கொள்ளும்.

0 comments:

Post a Comment