சனிக்கிழமை மாலையே
ஆட்டத்துடன் ஆரம்பமாகிறது சிறுவர்களுக்கு
தினசரிகளின் இணைப்புச் செய்திகளுடன்
இணைந்துவிடுகிறார் தாத்தா
ஆடல் பாடலுடன்
அக்கா தங்கைகள் ஐக்கியமாகின்றனர்
சூரியன் உச்சி வரும் வரை
தன் முதுகு காட்டி உறங்குகிறான் அண்ணன்
அறுசுவை உணவு உண்டு
ஓய்வு எடுக்கின்றனர் அப்பாவும் சித்தப்பாவும்
ஞாயிற்றுக் கிழமையும்
அம்மாவிற்கு மட்டும் அடுப்படியில் தொடங்கி
அங்கேயே முடிந்தும் விடுகிறது ..
( எங்கோ படித்தது .. )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment