மழை

on Thursday, March 26, 2009

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்து போகவேண்டியதுதானே"
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா
"சளி பிடிச்சிக்கிட்டு
செலவு வைக்க போற பாரு"
என்றார் அப்பா
தான் முந்தனையால் என் தலையை
துவட்டிகொண்டே
திட்டினால் அம்மா என்னையல்ல;
மழையை !"....

Swathi Cool Photographs